ஐ.எஸ். இயக்கத்தின் புதிய தலைவர் இந்து மதத்தை சேர்ந்த இந்தியரா? திடுக்கிடும் தகவல்
ஈராக், சிரியா நாடுகளுக்கு மட்டுமின்றி உலகையே அச்சுறுத்தி வரும் தீவிரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ்.ஐ இயக்கத்தின் புதிய தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் பொறுப்பேற்றுள்ளதாக வெளிவந்த செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த இந்திய வம்சாவளி வாலிபரான சித்தார்த் தார் என்பவர்தான் ஐ.எஸ் அமைப்பின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ளதாக அந்த இயக்கத்தின் மூத்ததளபதி ஒருவர் அறிவித்துள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது. பிறப்பால் இந்து மதத்தை சேர்ந்த சித்தார்த்தா சமீபத்தில் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளதாகவும், இவர் கடந்த பல ஆண்டுகளாக லண்டனில் வசித்து வந்தவர் என்றும் தற்போது இவர் அபு ருமாய்ஷ் என்று தனது பெயரை மாற்றிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. .
சமீபத்தில், பிரிட்டன் உளவாளிகள் கொல்லப்பட்டதாக ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்ட புதிய வீடியோவில் முகமூடியுடன் தோன்றி பேசியவர் சித்தார்தாதான் என்பது தற்போது தெரியவந்துள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஐஎஸ் தீவிரவாதிகளால் பாலியல் அடிமையாக கடத்திச் செல்லப்பட்ட யாஷிடி இனத்தை சேர்ந்த இளம்பெண் நிஹாத் பராகத் என்பவர் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், கிர்குக்கில் நான் பிடிபட்டதும் மொசூலில் உள்ள அபுதர் என்ற தீவிரவாத தலைவனிடம் என்னை அழைத்துச் சென்றனர். அவனிடம் யாஷிடி இனத்தை சேர்ந்த பெண்கள் பலர் செக்ஸ் அடிமைகளாக அடைபட்டு இருந்தனர் என்று கூறியுள்ளார்.