பஞ்சாபின் அடுத்த முதல்வர் சித்துவா? புதிய கட்சி தொடக்கம்

பஞ்சாபின் அடுத்த முதல்வர் சித்துவா? புதிய கட்சி தொடக்கம்

siddhuபிரபல முன்னாள் கிரிக்கெட் வீரரும், பா.ஜனதா கட்சியின் முன்னாள் மேல்சபை எம்பியுமான நவ்ஜோத்சிங் சித்து புதுக்கட்சியை தொடங்கியுள்ளார். முன்னதாக அவரை தங்கள் கட்சியில் இழுக்க காங்கிரஸும் ஆம் ஆத்மி கட்சியும் போட்டி போட்டு வந்த நிலையில் தற்போது திடீரென புதுக்கட்சியை சித்த் தொடங்கியுள்ளார்.

சமீபத்தில் பாஜகவில் இருந்து விலகி, எம்பி பதவியை ராஜினாமா செய்த சித்துவை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க ஆம் ஆத்மி தயாராக இருந்தது. அதே போல் பஞ்சாப் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை காங்கிரசும் அளிக்க முன்வந்தது.

ஆனால் இரண்டு கட்சிகளுக்கும் பிடிகொடுக்காமல் சித்து புதிய கட்சி குறித்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார். அவரது கட்சியின் பெயர் ஆஜாஸ் – இ- பஞ்சாப் என்பதாகும். பஞ்சாப் மாநிலத்தில் சித்து அடுத்த வாரத்தில் புதுக்கட்சி தொடங்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் அவரது கட்சி பங்கேற்க உள்ளது. செப்டம்பர் மாதம் 9-ம் தேதி கட்சி தொடங்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. சித்து பஞ்சாப் மாநிலத்தில் வருங்கால முதல்வர் ஆவாரா? என்பதை பொறுத்திருந்து பார்போம்.

Leave a Reply