ஆம் ஆத்மியில் இணைய சித்துவுக்கு எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. அரவிந்த் கெஜ்ரிவால்

ஆம் ஆத்மியில் இணைய சித்துவுக்கு எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. அரவிந்த் கெஜ்ரிவால்

siddhuபிரபல கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் சித்து விரைவில் ஆம் ஆத்மி கட்சியில் இணைவார் என்றும் விரைவில் வரவிருக்கும் பஞ்சாப் சட்டமன்ற் தேர்தலில் அவர் அக்கட்சியின் சார்பில் முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்றும் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியில் இணைய சித்துவுக்கு ஒருசில நிபந்தனைகளை ஆம் ஆத்மி தலைமை விதித்துள்ளதாகவும் அதன் காரணமாக சித்து குழப்பத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இதுகுறித்து அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது விளக்கம் அளித்துள்ளார். அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆம் ஆத்மி கட்சியில் நவ்ஜோத் சிங் சித்து இணைவதாக அதிக அளவில் ஊகங்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் விளக்கம் அளிக்க வேண்டியது எனது கடமை. கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து மீது நாங்கள் மிகுந்த மதிப்பு வைத்துள்ளோம். அவர் சிறந்த மனிதர். கடந்த வாரம் எனது இல்லத்தில் என்னை சித்து சந்தித்துப் பேசினார். ஆம் ஆத்மி கட்சியில் இணைவதா? வேண்டாமா? என்பது அவரது சொந்த விருப்பமாகும். ஆம் ஆத்மி கட்சியில் இணைவதற்கு அவர் எந்த முன்நிபந்தனையும் விதிக்கவில்லை. இது பற்றி முடிவெடுக்க அவருக்கு அவகாசம் தேவை. அதற்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம் என்று கூறியுள்ளார்.

பாஜக கொடுத்த ராஜ்யசபா உறுப்பினர் பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்த சித்து, சமீபட்தில் அரவிந்த் கெஜ்ரிவாலை நேரில் சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply