பாஜக எம்.எல்.ஏ பதவியை உதறிய சித்துவின் மனைவி. கணவரின் கட்சியில் பொறுப்பு

பாஜக எம்.எல்.ஏ பதவியை உதறிய சித்துவின் மனைவி. கணவரின் கட்சியில் பொறுப்பு

27பிரபல கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் சித்து பாஜக கட்சியில் இருந்ததோடு அக்கட்சியின் ராஜ்யசபா எம்பியாகவும் இருந்தார். இந்நிலையில் சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகி புதிய கட்சியை ஆரம்பித்ததை அடுத்து ராஜ்யசபா எம்பி பதவியையும், பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பதவியையும் அவர் ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் சித்துவின் மனைவி நவ்ஜோத்கர் பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் தொகுதியில் பாஜகவின் எம்.எல்.ஏவாக இருந்தார். தற்போது அவரும் எம்.எல்.ஏ பதவியையும், பாஜக அடிப்படை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்துள்ளார். அவருக்கு கணவரின் கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என தெரிகிறது.

இந்நிலையில் சித்துவின் கட்சிக்கு பஞ்சாபில் நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்து வருவதால் நடைபெறவுள்ள தேர்தலில் வெற்றி பெற்று சித்து பஞ்சாபின் முதல்வர் ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply