ஆம் ஆத்மி கட்சியின் அடுத்த முதல்வர் கிரிக்கெட் வீரர் சித்து?
ஆம் ஆத்மி கட்சியின் முதல் முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் கம்பீரமாக வீற்றிருக்கும் நிலையில் விரைவில் பஞ்சாப் மாநில முதல்வராகவுள்ளார் முன்னாள் கிரிக்கெட் வீரரும் பாஜக மாநிலங்களவை உறுப்பினருமான நவ்ஜோத் சிங் சித்து, இதற்கு ஆரம்பகட்டமாக தனது எம்.பி. பதவியை ராஜினாமா அவர் செய்துள்ளார்.
2017ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக சித்து நிறுத்தப்படுவார் என ஆம் ஆத்மி வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், அவர் தனது ராஜ்யசபா உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருப்பது இந்த யூகங்களை உறுதி செய்துள்ளது.
ராஜினாமா கடிதத்தை அனுப்பும் முன்னர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த சித்து,, “பஞ்சாப் மாநில மக்கள் மாற்றத்தை எதிர்நோக்குகின்றனர்” என்று கூறியுள்ளார்.
சித்து தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுரும் தனது நியமன எம்.பி பதவியை ராஜினாமா செய்துள்ளார். விரைவில் இருவரும் ஆம் ஆத்மி கட்சியில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.