திண்டிவனம்: சிங்கனூர் ஸ்ரீநினிவாச பெருமாள் கோவிலில் திருப்பாவாடை உற்சவம் நடந்தது. திண்டிவனம் அடுத்த சிங்கனூர் ஸ்ரீலக்ஷ்மி நாராயண ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாளுக்கு வார்ஷீக திருப்பாவாடை (அன்னகூடம்) உற்சவம் நடந்தது. விழாவையொட்டி நேற்று முன்தினம் அதிகாலை நடை திறக்கப்பட்டது. மூலவர், தாயார், ஆண்டாள் ஆகிய சுவாமிகளுக்கு மஹா அபிஷேகம், சிறப்பு அலங்காரத்தில் சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. மூலவர் திருப்பதி வேங்கடமுடையான் அலங்காரத்தில் அருள் பாலித்தார். காலை 9 மணிக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. தொடர்ந்து பகல் 12 :00 மணிக்கு திருப்பாவாடை உற்சவம் நடந்தது. பூஜை களை கோவில் அர்ச்சகர் ராகவா பட்டாச்சாரியார் தலைமையிலான குழுவினர் செய்தனர். மகா தீபாராதனை செய்யப்பட்ட அன்னக்கூடை பிரசாதங்கள், பழங்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஸ்ரீ லக்ஷ்மி நாராயண ஸ்ரீ ஸ்ரீநிவாச ஸேவா ஸமிதியினர் செய்திருந்தனர்.