Nature Journal இதழில், கேலக்சி எனப்படும் விண்மீன் மண்டலத்தில் 3 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் இருந்து ரேடியோ சிக்னல் ஒன்றை வான்வெளி விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.
இரண்டாவது முறையாக FRB (Fast Radio Burst) என்ற சிக்னல் கேலக்ஸியில் இருந்து பூமிக்கு வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை FRB 20190550B என்று விஞ்ஞானிகள் அழைக்கின்றனர்.
இந்த சிக்னல் நியூட்ரான் நட்சத்திரத்தை வெளியிட்ட சூப்பர்நோவா வெடிப்பால் வெளியேற்றப்பட்ட அடர்த்தியான பொருட்களில் இருந்தும் இந்த சிக்னல் வந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.