சீக்கியர்களின் புனித நூல் களவு போனதால் பஞ்சாபில் வன்முறை. 15 பேர் காயம்

சீக்கியர்களின் புனித நூல் களவு போனதால் பஞ்சாபில் வன்முறை. 15 பேர் காயம்
sikh 1 sikh 2 sikh
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஒரு சீக்கியர் கோவிலில் சீக்கியர்களின் புனித நூல் காணாமல் போனதை கண்டுபிடித்த கொடுப்பதில் போலீஸார் மெத்தனம் காட்டியதாகவும், இதனால் ஆத்திரமடைந்த சீக்கியர்கள் நடத்திய போராட்டம் ஒன்று வன்முறையில் முடிந்ததாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த வன்முறையில்  8 போலீசார் உள்பட 15 பேர் காயமடைந்தனர்.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள  ஜவஹர் சிங் லாலா என்ற கிராமத்தில் உள்ள  சீக்கிய குருத்வாரா ஒன்றில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த  சீக்கியர்களின் புனித நூலான ‘குரு கிராந்தி சாகிப்’ கடந்த ஜூன் மாதத்தில் களவு போனது. இந்த நூலை கண்டுபிடித்து தருமாறு சீக்கியர்கள் சாத்வீகமான முறையில் பல போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில் கடந்த செப்டம்பர் 25-ம் தேதி புனித நூல் களவாடப்பட்ட  குருத்வாரா அமைந்துள்ள பகுதியில்,  ‘உளறல் மொழி’ என்று குரு கிராந்தியை குறிப்பிடும் வகையில் சில சர்ச்சைக்குரிய போஸ்டர்கள் மர்மநபர்களால் ஒட்டப்பட்டது., இந்த போஸ்டரை ஒட்டியவர்களை கைதுசெய்ய வேண்டும் என சீக்கிய அமைப்புகள் தீவிரமாக வலியுறுத்தி வந்தன. ஆனால், குற்றவாளிகள் இதுவரை சிக்கவில்லை.

குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காத போலீசைக்  கண்டித்து, பல சீக்கிய அமைப்புகள் ஒன்றிணைந்து இன்று கோட்கபுராவில்  தர்ணா போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தன. ஆனால், போலீசார் அனுமதியளிக்காத நிலையில், திரண்டவர்களை கலைந்துபோக  எச்சரிக்கை விடுத்தனர். ஆனால், போராட்டக்காரர்கள் சாலைமறியலில் ஈடுபட முயன்றனர்.

இதையடுத்து கூட்டத்தைக் கலைக்க வஜ்ரா வாகனம் கொண்டுவரப்பட்டு,  தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. மேலும் ரப்பர் குண்டுகளும் பிரயோகப்படுத்தப்பட்டன. தடியடியும் நடத்தப்பட்டது. போராட்டக்காரர்களும் பதிலுக்கு போலீஸைத் தாக்கினர். இதில் 8 போலீசார் உள்பட 15 பேர் காயமடைந்தனர். இந்நிலையில் பஞ்சாப் மாநில முதல்வர் பிரகாஷ் சிங் பாதல்,  அமைதி காக்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Reply