ஒரு பக்தனுக்கு வேண்டுகோள் எதுவும் இருக்காது. எனவே, அதை முன்வைத்து சங்கல்பம் செய்து கொள்ளாமல், சுவாமிக்கு அர்ச்சனை செய்யுங்கள் என்று கூறுவதற்கு பதிலாக, சுவாமி பெயருக்கு செய்யுங்கள் என்று கூறுவது வழக்கத்தில் வந்து விட்டது. இது மனப் பக்குவத்தைப் பொறுத்த விஷயம். நமக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பது இறைவனுக்குத் தெரியும். நாம் எதுவும் கேட்க வேண்டிய அவசியமில்லை. இந்த விஷயத்தில் மனம் திடமாக இருந்து விட்டால் போதும். நிம்மதியாக வாழலாம். இப்படி பக்குவம் கொண்டவர்களே, சுவாமிக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் போதுமானது என்று நினைக்கிறார்கள்.