பெங்களூரில் சிம்பு ஹன்சிகா. மீண்டும் காதலா?

10ஹன்சிகா கால்ஷீட் கொடுக்க முடியாது என்று கூறியதால் வாலு திரைப்படம் கைவிடப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து சமாதானப்பேச்சுவார்த்தை நடத்தியதால் தற்போது ஹன்சிகா மீண்டும் வாலு படத்திற்கு கால்ஷீட் கொடுத்துள்ளார்.

நேற்று முதல் வாலு படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கிவிட்டதாக படக்குழுவினர் தெரிவித்தனர். பெங்களூரில் உள்ள ஏரிக்கரையில் செட் அமைத்து நேற்று ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டது என்று படத்தின் இயக்குனர் விஜய் சந்தர் செய்தியாளர்களிடம் கூறினார். தற்போது சிம்பு, ஹன்சிகா இருவரும் பெங்களூரில் தங்கியிருந்தாலும் வெவ்வேறு ஓட்டலில் தங்கியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வாலு திரைப்படத்தில் இன்னும் மூன்று பாடல்கள் மட்டுமே எடுக்க வேண்டியது இருக்கின்றது என்றும் பெங்களூரில் ஒரு பாடலையும் அடுத்து மே 12ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் இரண்டு பாடல்களையும் படமாக்க திட்டமிட்டு இருப்பதாகவும் அவர் கூறினார். ஹன்சிகா படப்பிடிப்பிற்கு நல்ல ஒத்துழைப்பு கொடுப்பதாகவும் வாலு திரைப்படம் விரைவில் வெளிவர இருப்பதாகவும் விஜய் சந்தர் கூறினார். சிம்பு-ஹன்சிகா காதல் மீண்டும் துளிருமா என்ற கேட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

Leave a Reply