கடந்த ஏழு வருடங்களுக்கு முன்னர் இதே அக்டோபர் மாதம் விஜய் டிவியில் “ஜோடி நம்பர் ஒன்” என்ற ரியாலிட்டி ஷோ ஒன்று நடைபெற்றதை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. அந்த நிகழ்ச்சியில் ஜட்ஜ் ஆக இருந்த சிம்புவும், அதில் கலந்துகொண்ட நடிகர் பிரித்விராஜ் என்ற பப்லுவும் நேரடியாக சண்டை போட்டுக்கொண்ட நிகழ்ச்சிதான் அது.
தான் அந்த நிகழ்ச்சியில் நன்றாக நடனம் ஆடியதாகவும், ஆனால் சிம்பு தான் ஆடவே இல்லை என்று கமெண்ட் கூறியதாகவும் பிரித்விராஜ் கூற, பின்னர் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக அழுதுகொண்டே தான் இந்த நிகழ்ச்சியில் இருந்து எலிமினெட் ஆவதாக கோபித்துக்கொண்டு சிம்பு வெளியேறினார். அதன் பின்னர் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் சிம்புவை சமாதானப்படுத்தி மீண்டும் அழைத்து வந்து ஜட்ஜ் ஆக உட்கார வைத்தனர்.
தற்போது ஏழு வருடங்களுக்கு பின்னர் இந்த நிகழ்ச்சி குறித்து பிருத்விராஜ் மனம்திறந்து சில உண்மைகளை ஒரு பிரபல பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க நாடகம் என்றும், விஜய் டிவி நிர்வாகத்தினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நானும் சிம்புவும் சண்டை போடுவது போல நடித்ததாகவும் அவர் கூறியுள்ளார். டி.ஆர்.பி ரேட்டிங் அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவே அன்றைய ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சி தயாரிப்பாளர் செய்த செட்டப் காரணமாகவே சிம்புவும் பிரித்விராஜும் சண்டை போட்டதாக தற்போது வெளிவந்த உண்மை விஜய் டிவி ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மக்களை முட்டாளாக்கி அதன் மூலம் காசு பார்க்கும் இந்த கும்பலை பொதுமக்கள் அடையாளம் காணவேண்டும் என பலர் தங்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.
இப்போதும் கூட ஒருசில தொலைக்காட்சிகள் ரியாலிட்டி ஷோ என்ற போர்வையில் டி.ஆர்.பி ரேட்டிங்கை உயர்த்த பல நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாகவும், அதில் கலந்து கொள்பவர்கள் தொலைக்காட்சி சீரியல் நடிகர்களை விட சிறப்பாக நடித்து வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே தொலைகாட்சி நேயர்களே உங்கள் பொன்னான நேரத்தை மோசடியாக நடைபெறும் டிராமா சண்டைகளைப் பார்த்து ஏமாறாமல் நல்ல நிகழ்ச்சிகளை மட்டும் பார்க்க வேண்டுகிறோம்.
[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/1rRUnTI” standard=”http://www.youtube.com/v/PGcnFn69S5Q?fs=1″ vars=”ytid=PGcnFn69S5Q&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=¬es=” id=”ep1328″ /]