டிராப் ஆன இரண்டு படங்களுக்கு விடிவுகாலம்.
சிம்பு நடிப்பில் செல்வராகவன் இயக்கி வந்த ‘கான்’ திரைப்படம் திடீரென டிராப் ஆனது. இந்த படத்திற்கான தயாரிப்பாளர் கிடைக்காததால் ஒரு வாரம் மட்டுமே படப்பிடிப்பு நடந்த நிலையில் இந்த படம் டிராப் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்குவதாக இருந்த ‘சண்டக்கோழி 2’ படமும் டிராப் ஆனதால் விஷால் அதிரடியாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் விஷால் தனது டுவிட்டரில் தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த இரண்டு படங்களுமே மீண்டும் தொடரவுள்ளதாக கூறப்படுகிறது. ‘இது நம்ம ஆளு’ வெற்றிக்கு பின்னர் சிம்புவின் மார்கெட் உயர்ந்திருப்பதால் ‘கான்’ படத்தை மீண்டும் தொடர செல்வராகவன் முடிவு செய்திருப்பதாகவும் இதற்கான தயாரிப்பாளர் கிடைத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
அதேபோல் ‘சண்டக்கோழி 2’ படத்தை மீண்டும் தொடங்க லிங்குசாமியிடம் விரைவில் விஷால் பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.,