சிம்புதேவன் இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்த புலி’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை – மகாபலிபுரம் சாலையில் உள்ள ரிசார்ட் ஒன்றில் இன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு வந்த அனைவரரயும் விஜய் வாசலில் நின்று வரவேற்றார். மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் அவர்களின் மறைவிற்கு ஒரு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்திய பின்னர் இந்த விழா ஆரம்பமானது.
இந்த விழாவில் பேசியவர்களின் விபரங்கள் இதோ:
டி.ராஜேந்தர்: இளையதளபதி விஜய் ஒரு தூய உள்ளம் கொண்டவர். ஒவ்வொரு தமிழனின் மனதிலும் அவர் நிற்கிறார். விஜய் எனக்கு புடிச்ச ஒரு தமிழன். நல்ல நண்பன். விஜய்கிட்ட இருக்கிறது நட்பு, நான் பார்க்கல அவர்கிட்ட தப்பு. சிம்புவுக்கு ஒரு அண்ணா மாதிரி இருக்கிறது விஜய் தான். இதான் உண்மை. உணவு நல்லா இருக்கணும்ன்னா தேவை உப்பு, உறவு நல்லா இருக்க தேவை நட்பு. சிம்பு இன்னொரு பெரிய நடிகரின் ரசிகன். ஆனால் விஜய் சிம்புவின் நெருங்கிய நண்பன்
விநியோகிஸ்ஹர் காஸ்மோ சிவா: நான் இதுவரை எம்.ஜி.ஆரை பார்த்ததில்லை. ஆனால் நான் விஜய் வாழும் காலத்தில் நானும் வாழ்கிறேன் என்பதில் பெருமை அடைகிறேன்.
நந்திதா ஸ்வேதா: ‘புலி’ படத்தில் ‘குமுதா’ என்ற கேரக்டரில் நடித்துள்ளேன். எனக்கு ஒரு நல்ல கேரக்டர் கொடுத்த சிம்புதேவனுக்கு நன்றி. விஜய்யுடன் பணிபுரிந்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
எஸ்.ஏ.சந்திரசேகர்: விஜய் இந்த அளவு உயர்வதற்கு காரணமான அனைத்து இயக்குனர்களுக்கும் நன்றி
எஸ்.ஜே.சூர்யா: புலி என்ற டைட்டில் இளையதளபதி விஜய்க்கு மட்டுமே பொருந்தும்,
கே.எஸ்.ரவிகுமார்: இந்த விழாவிற்கு வந்த ஒவ்வொருவரையும் விஜய் தானே முன்னின்று வரவேற்றதை பார்த்து, விஜய்யின் எதிரிகள் கூட வாழ்த்துகின்றனர்.
பி.டி.செல்வகுமார்: தனது பி.ஆர்.ஓ ஒருவரை தயாரிப்பாளர் ஆக்கிய ஒரே நடிகர் விஜய்தான்