இயக்குனர் கவுதம் மேனன் படத்தில் பெயர்கள் பெரும்பாலானவை எம்.ஜி.ஆர் படங்களில் பாடல்கள் வரியாகத்தான் இருக்கும். பச்சைக்கிளி முத்துச்சரம், வேட்டையாடு விளையாடு படங்களை அடுத்து உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் என்ற பாடலை ஞாபகப்படுத்தும் வகையில் ‘என்னை அறிந்தால்’ என டைட்டில் வைத்தார்.
இந்நிலையில் சிம்பு நடிக்கவிருக்கும் கவுதம் மேனனின் அடுத்த படத்திற்கு முதலில் ‘சட்டென்று மாறுது வானிலை’ என்ற தலைப்பு வைத்திருந்தார். ஆனால் திடீரென அந்த டைட்டிலை தற்போது மாற்றியுள்ளார்.இந்த படத்திற்கு ‘அச்சம் என்பது மடமையடா’ என எம்.ஜி.ஆர் பாடலின் டைட்டிலையே மீண்டும் ஒருமுறை வைத்துள்ளார்.
சிம்பு, பல்லவி சுபாஷ் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் 10ஆம் தேதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக கூறப்படுகிறது.