சென்னையில் வேலை முடிஞ்சிருச்சு. மும்பைக்கு போகும் சிம்பு
சென்னையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கடந்த சில நாட்களாக கலந்து கொண்டிருந்த நடிகர் சிம்பு, தற்போது ஜல்லிக்கட்டு பிரச்சனை முடிவடைந்ததை அடுத்து தனது அடுத்த படமான ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டார்.
இந்த படத்தின் ஒரு பாடல் காட்சிக்காக அவர் இம்மாத இறுதியில் மும்பை செல்லவுள்ளதாகவும் இந்த பாடல் அஸ்வின் தாதா கேரக்டரின் அறிமுகப்பாடல் என்பதால் இந்த பாடலை அவரே எழுதியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் இந்த படத்தில் சிம்பு, தமன்னா, ஸ்ரேயா, மகத், விடிவி கணேஷ், சந்தானம், உள்பட பலர் நடித்து வருகின்றனர். யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இந்த படத்தை மைக்கேல் ராயப்பன் அதிக பொருட்செலவில் தயாரித்து வருகிறார்.