ரஷ்ய விமானத்தை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தியது உண்மையா? எகிப்து அதிபரின் திடுக்கிடும் தகவல்
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ரஷ்ய விமானம் ஒன்று எகிப்து எல்லையில் விபத்துக்குள்ளாகி அதில் பயணம் செய்த 224 பேர்களும் பலியாகிய நிலையில் இந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியது நாங்கள்தான் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் அமைப்பு பொறுப்பேற்றது.
இந்நிலையில் ரஷ்ய பயணிகள் விமானத்தை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தியதாக கூறுவது பொய் பிரச்சாரம் என்றும், இந்த வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என்றும் எகிப்து ஜனாதிபதி அப்துல் பத்தா அல்-சிசி தெரிவித்துள்ளார். பி.பி.சி.செய்தி நிறுவனத்திற்கு எகிப்து அதிபர் அளித்த பேட்டியில் கூறியதாவது, ”ரஷ்ய விமானத்தை ஐ.எஸ். தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தியதாக கூறுவது பொய் பிரச்சாரம். எகிப்த் நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்துடனும், நாட்டின் பாதுகாப்பை சீர்குலைக்கும் விதத்துடனும் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. சினாய் தீபகற்பம் முழுவதும் எங்களின் முழு கட்டுப்பட்டில்தான் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல் அமெரிக்காவின் தேசிய புலனாய்வு அமைப்பின் இயக்குனர் ஜேம்ஸ் அவர்கள் கூறியபோது, ‘விமானத்தை ஐ.எஸ். தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தியதற்கான நேரடியான ஆதாரங்கள் எதுவும் இல்லை. மேலும் அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு’ என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் ரஷ்ய விமானம் தொழில்நுட்ப காரணங்களால்தான் விபத்துக்குள்ளாகியதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary : Sinai plane crash: IS claims ‘propaganda’, says Egypt president