சிந்து ஒரு இந்தியர். பயிற்சியாளர் கோபிசந்த் விளக்கம்

சிந்து ஒரு இந்தியர். பயிற்சியாளர் கோபிசந்த் விளக்கம்

sindhu silverஒலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்ற பி.வி.சிந்துவுக்கு ஒருபுறம் நாடே பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வரும் நிலையில் அவர் எங்கள் மாநிலத்தவர் என்று தெலுங்கானா மற்றும் ஆந்திரபிரதேசம் ஆகிய இரு மாநிலங்களும் குடுமிப்பிடி சண்டை போட்டு வருகின்றன. இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள சிந்துவின் பயிற்சியாளர் கோபிசந்த், பிவி சிந்து ஒரு இந்தியர் என்று இந்த பிர்ச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

கோபிசந்தின் விளக்கத்திற்கு பின்னரும் இரண்டு மாநில அரசுகளும் இந்த விஷயத்தை அவ்வளவு எளிதில் விட்டுவிடுவதாக இல்லை. நேற்று காலை ராஜீவ்காந்தி விமான நிலையத்தில் வந்திறங்கிய சிந்துவை வரவேற்க ஆந்திர, தெலுங்கானா என இரண்டு மாநில அமைச்சர்களுமே போட்டி போட்டு காத்திருந்தனர்.

வெள்ளிப் பதக்கம் வென்ற சிந்துவிற்கு ஆந்திரா அரசு 3 கோடி ரூபாய் பணத்துடன், 1000 சதுர யார்டு வீட்டுமனை வழங்கப்படும் என்று அறிவித்த நிலையில் உடனே தெலுங்கானா அரசும் 5 கோடி ரூபாயுடன் 1000 சதுர யார்டு வீட்டுமனை சிந்துவிற்கு பரிசாக வழங்கப்படும் என்று போட்டியாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இரண்டு மாநிலங்களின் போட்டி சிந்துவுக்கு ஒருவகையில் வருமானம் தரக்கூடியதாக இருக்கின்றது என்பது ஒரே ஆறுதல்

Leave a Reply