கடந்த மார்ச் மாதம் மலேசியாவில் இருந்து சீனாவிற்கு செல்லவிருந்த MH18 விமானம் காணாமல் போய் 9மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் அந்த விமானத்தின் கதி என்னவென்று தெரியாத நிலையில் இன்று காலை இந்தோனேஷியாவில் இருந்து சிங்கப்பூருக்கு சென்ற விமானம் திடீரென மாயமானதாக வந்த செய்திகள் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த விமானத்தில் பயணம் செய்த 162 பேரின் கதி என்ன என்று தெரியவில்லை.
இந்தோனேஷியாவில் உள்ள சுராபாயா நகரில் இருந்து QZ8501 என்ற ஏர்ஏசியா விமானம் 162 பேருடன் இன்று காலை 6.42 மணிக்கு சிங்கப்பூருக்கு புறப்பட்டது. இந்த விமானத்தில் 149 இந்தோனேஷியர்கள், 3 கொரியர்கள், 1 சிங்கப்பூரை சேர்ந்தவர் 1 பிரிட்டன் , 1 மலேசியர்கள் மற்றும் 7 விமான ஊழியர்கள் இருந்துள்ளனர்.
இந்த விமானம் புறப்பட்டுச் சென்ற சில நிமிடங்களில் மாற்று பாதையில் திடீரென பயணம் செய்யத்தொடங்கியதாக ராடார் காட்டியுள்ளது. அதைத் தொடர்ந்து, காலை 7.24 மணிளவில் விமான கட்டுப்பாட்டு அறையின் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இதையடுத்து, விமான நிலையத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்த அதிகாரிகள் அதிர்ச்சியாகினர். மாயமான ஏர் ஏசியா விமானத்தை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விமானம் சரியான பாதையில் சென்றிருந்தால் காலை 8.30 மணிக்கே சிங்கப்பூர் சென்றிருக்க வேண்டும். இந்த விமானம் ஜாவா கடற்பகுதிக்கு மேல் சென்று கொண்டிருந்தபோது திடீரென பைலட்டுக்களின் கட்டுப்பாட்டை இழந்துள்ளதாக இந்தோனேஷியா போக்குவரத்து துறை அதிகாரி கூறியுள்ளார்.