மனைவியின் வளர்ச்சிக்காக ரூ.227 கோடி முறைகேடு செய்த சிங்கப்பூர் பாதிரியார்
சிங்கப்பூர் பாதிரியார் ஒருவர் தனது மனைவிக்காக ரூ.227.5 கோடி அளவுக்கு ஊழலில் ஈடுபட்டதாக திடுக்கிடும் செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த பாதிரியாரை குற்றவாளி என அறிவித்துள்ள அந்நாட்டு நீதிமன்றம் அவருடைய தண்டனையை விரைவில் அறிவிக்கவுள்ளதாக கூறியுள்ளது
சிங்கப்பூரில் ‘சிட்டி ஹார்வெஸ்ட் சர்ச்’ என்ற பெயரில் செயல்பட்டு வரும் கிறிஸ்தவ சபையின் பாதிரியார் கோங் ஹி. இவரது மனைவி ஹோ யா சன் பிரபல பாப் பாடகி ஆவார்.
பாப் இசை உலகில் தனது மனைவியின் வளர்ச்சிக்காக பக்தர்கள் காணிக்கையாக கொடுத்த நன்கொடைகளை பாதிரியார் கோங் ஹி முறைகேடு செய்ததாகக் ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அவர் ரூ.227.5 கோடியை கையாடல் செய்துள்ளதாகவும், அவரது சபையைப் சேர்ந்த மூத்த நிர்வாகிகள் சுமார் ரூ.156 கோடி அளவுக்கு முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டு இதுகுறித்து சிங்கப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் கோங் ஹி மீதான வழக்கு சிங்கப்பூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த நீதிபதி சி கி ஓன், பாதிரியார் கோங் ஹி குற்றவாளி என்று தீர்ப்பளித்தார். தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார். இந்த வழக்கில் பாதிரியார் கோங் ஹிக்கு அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என்று தெரிகிறது