தனிமைப்படுத்துதலை கடைபிடிக்காத நபரின் பாஸ்போர்ட் கேன்சல்: அதிரடி நடவடிக்கை
வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பியவர்கள் தனிமைப்படுத்துதலை கடைப்பிடிக்க வேண்டுமென மத்திய மாநில அரசுகள் வலியுறுத்தியும் பலர் அந்த விதிகளை காற்றில் பறக்க விட்டு விடுகிறார்கள்
இந்த நிலையில் சிங்கப்பூரைச் சேர்ந்த ஒருவர் தனிமைப்படுத்துதலை சரியான முறையில் கடைப்பிடிக்காததை அடுத்து அவருடைய பாஸ்போர்ட்டை அந்நாட்டு அரசு ரத்து செய்துள்ளது. இதனை அடுத்து அவர் இனி எந்த நாட்டிற்கும் செல்ல முடியாது என்பது குறிப்பிடத்தக்கது
இதுபோன்ற கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இந்தியா உள்பட மற்ற நாடுகளில் வைரஸ் பரவுவதை தடுக்க முடியும் என கூறப்பட்டு வருகிறது