சிங்கப்பூரில் தமிழ் ஆட்சி மொழி: அமைச்சர் உறுதி

சிங்கப்பூரில் தமிழ் ஆட்சி மொழி: அமைச்சர் உறுதி

சிங்கப்பூரில் தொடர்ந்து தமிழ் மொழி ஆட்சி மொழியாக இருக்கும் என சிங்கப்பூரின் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் எஸ் ஈஸ்வரன் உறுதியளித்துள்ளது தமிழர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

சிங்கப்பூரில் மொத்தம் நான்கு ஆட்சி மொழிகள் உள்ளன. அதில் ஒன்று தமிழ்மொழி. சிங்கப்பூரில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் ஆங்கிலம், சீனா, மலேய் போன்று தமிழ் மொழியும் பயிற்றுவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் சிங்கப்பூரில் நடந்த நூல் வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய சிங்கப்பூரின் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் எஸ் ஈஸ்வரன் கூறியதாவது:

சிங்கப்பூரில் தமிழ் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்று சிங்கப்பூர் அரசு தீர்மானம் கொண்டுள்ளது.

அதனால்தான் நாடாளுமன்றத்தில் அதிகாரப்பூர்வ பேச்சு மொழியாகவும் பள்ளிக்கூடங்களிலும் பயிற்று மொழியாகவும் ஆக்கப்பட்டுள்ளது. தமிழ்மொழிக்கு முழுமையான ஆதரவு அளிப்பதில் அரசு கொள்கையாக வகுத்துள்ளது. இந்த நாட்டில் உள்ள தமிழ் சமூகத்தினர், குறிப்பாக இளைஞர்களிடம் தமிழ்மொழியை கொண்டு சேர்த்து, அன்றாட வாழ்க்கையில், பயன்பாட்டு மொழியாக்கி உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும்.

தமிழ்மொழியை பரப்புவதற்கும், தமிழ் கலாச்சாரத்தை காப்பாற்றவும் இளைய சமூகத்தினரிடம், விழிப்புணர்வையும், அவர்களின் பங்களிப்பையும் அதிகப்படுத்த வேண்டும். அதற்காக தமிழ்மொழித் திருவிழாவை நடத்த வேண்டும்

Leave a Reply