உலகின் மிக ஆரோக்கியமான நாடாக சிங்கப்பூர் தேர்வு.

உலகின் மிக ஆரோக்கியமான நாடாக சிங்கப்பூர் தேர்வு.
singapore
சர்வதேச அளவில் ஆரோக்கியமாக உள்ள நாடுகளின் பட்டியலை ஐக்கிய நாடுகள் சபை, உலக வங்கி மற்றும் உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியுள்ளது. இந்த பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இத்தாலி 2வது இடத்தையும் ஆஸ்திரேலியா 3வது இடத்தையும் பெற்ருள்ளன. இந்த பட்டியலில் இந்தியா 103-வது இடத்தைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.   

இந்த பட்டியல் ஒரு நாட்டின் பிறப்பு, இறப்பு விகிதங்கள், மரணத்திற்கான காரணங்கள், இளைய தலைமுறையினரிடையே நிலவி வரும் புகைப்பழக்கம், அதிக கொழுப்பு உள்ளிட்ட பிரச்சனைகளால் ஏற்படும் உடல்நலக் குறைபாடுகள் மற்றும் நோய்த்தடுப்பு திட்டங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பட்டியலுக்காக சர்வதேச அளவில் 10 லட்சம் மக்களிடையே ஆய்வு நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

சர்வதேச அளவில் ஆரோக்கியத்தில் 103வது இடத்தை பிடித்திருக்கும் இந்தியா மற்றொரு பட்டியலில் 7வது இடத்தை பிடித்து தலைநிமிர்ந்து காணப்படுகிறது. உலகின் மதிப்பு மதிப்புமிக்க நாடுகளின் தரவரிசை பட்டியல் ஒன்று பிராண்ட் பினான்ஸ் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியா 7-வது இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், சீனா 2வது இடத்திலும், 3வது மற்றும் 4வது இடங்களில் ஜெர்மனியும், இங்கிலாந்தும் உள்ளது. 5-வது இடத்தில் ஜப்பான் உள்ளது. 6-வது இடத்தில் பிரான்ஸ் உள்ளது

உலகில் உள்ள 100 நாடுகளில் இருக்கும் முக்கிய நிறுவனங்களின் மதிப்பு, அவற்றின் விற்பனை மற்றும் நாட்டின் ஜி.டி.பி. ஆகியவற்றை கொண்டு மிகவும் மதிப்புமிக்க நாடுகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary: Singapore ranked first in world’s healthiest countries list

Leave a Reply