சிங்கப்பூர் கோவிலில் ரூ.692 கோடி செலவில் 32 அடி உயர விநாயகர் சிலை.

singapore templeசுமார் 45 லட்சம் சிங்கப்பூர் டாலர்கள் செலவில் சிங்கப்பூரில் உள்ள ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயம் புதுப்பிக்கப்பட்டு வரும் திங்கள்கிழமை முதல் பக்தர்களின் தரிசனத்திற்கு திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

120 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த விநாயகர் ஆலயத்தை  இந்தியாவைச் சேர்ந்த ஸ்தபதி பழனி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் தலைமையில் இந்திய மதிப்பில் சுமார் ரூ.2,076 கோடி செலவில் நவீன முறையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலயத்தில், ஒற்றை கிரானைட் கல்லில்,சுமார் ரூ.692 கோடி செலவில் 32 அடி உயர விநாயகர் சிலையை நிறுவுவதற்காக அரசின் அனுமதியை ஆலய நிர்வாகக் குழு கோரியுள்ளதாகவும், விரைவில் அனுமதி கிடைத்துவிடும் என்று எதிர்ப்பார்ப்பதாகவும் ஆலய பராமரிப்பு குழுவின் தலைவர் ஆர். தெய்வேந்திரன் கூறினார்.

இந்த கோவிலின் திறப்பு விழாவுக்கு இந்தியாவில் இருந்து அதிகளவில் பக்தர்கள் செல்லவிருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply