தனியாக வசித்து வந்த பிரபல பாடகி கழுத்தறுபட்டு கொலை.

singr
ஒசூர் நகரில் வீட்டில் தனியாக இருந்த உள்ளூர் மேடைப் பாடகி ஒருவர் கொலை செய்யப்பட்டார்.

ஒசூர் நகராட்சிக்குட்பட்ட மூக்கண்டப்பள்ளி எம்.எம்.நகர் என்ற பகுதியை சேர்ந்தவர் பாடகி ஜெயந்தி. 30 வயதான
 இவர்  தனது கணவர் தர்மா மற்றும் 10வயது மகள் தர்ஷினி ஆகியோர்களுடன் சிலகாலம் இந்த பகுதியில் வசித்து வந்தார். இதற்கிடையே இவருக்கும் இவருடைய கணவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்தார். ஒரே மகள் தர்ஷினி அருகில் உள்ள ஹாஸ்டலில் தங்கி படித்துவருகிறார்.

கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த ஆஷா, திருமணம் மற்றும் கோவில் திருவிழா போன்ற நிகழ்ச்சிகளில் நடைபெறும் இன்னிசை நிகழ்ச்சிகளில் பாட்டுப் பாடி வந்தார். நடன நிகழ்ச்சிகளிலும் இவர் பங்கேற்று வந்தார்.

இந்த நிலையில், ஆஷா வீட்டின் கதவு நேற்று திறந்து கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்த போது, ஆஷா கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து, பின்னர் போலீஸுக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் கிடைத்தவுடன் உடனடியாக விரைந்து வந்த கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. கண்ணம்மாள், ஒசூர் ஏ.எஸ்.பி. ரோஹிணி பிரியதர்ஷினி, சிப்காட் ஆய்வாளர் சங்கர், ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

கொலை செய்யப்பட்ட ஆஷாவின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்து வைக்கப்பட்டிருந்தது. அவரது வீட்டில் மது பாட்டில்களும் அதிகளவு இருந்தன.  பல ஆண்கள் இவரது வீட்டிற்கு அடிக்கடி வந்து போவதுண்டு என விசாரணையில் தெரிய வந்தது. எனவே, ஆஷாவை கொலை செய்த மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply