பிரபல கர்நாடக சங்கீத பாடகி செளம்யா முதன்முதலாக திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். கர்நாடக சங்கீத அரங்கு மற்றும் விஜய் டிவி உள்பட ஒருசில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மட்டும் தலைகாட்டி வந்த பாடகி செளம்யா, தற்போது ஜேம்ஸ் வசந்தன் இயக்கிவரும் ‘வானவில் வாழ்க்கை’ திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
வானவில் வாழ்க்கை திரைப்படத்தின் நாயகி ஜனனிக்கு அம்மாவாக அவர் நடிக்கவுள்ளார். இதுகுறித்து ஜேம்ஸ் வசந்தன் கூறியபோது, ஜனனியும் செளம்யாவும் முக ஒற்றுமையுடன் இருந்ததால் இவர்கள் இருவரும் அம்மா-மகளாக நடித்தால் நன்றாக இருக்கும் என தான் கருதியதாகவும், அதற்காக நான் செளம்யாவை அணுகியபோது அவர் தனக்காக ஒப்புக்கொண்டதாகவும் கூறியுள்ளார்.
முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் இந்த படத்தில் 14 பாடல்கள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் மூலம் ஜேம்ஸ் வசந்தன் இயக்குனராக அறிமுகம் ஆகிறார்.