டெல்லி சட்டசபைக்கு கடந்த 6ஆம் தேர்தல் நடந்த தேர்தலின் முடிவுகள் தற்போது வெளியாகி வருகின்றது. இந்த தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களின் ஆம் ஆத்மி கட்சி பெரும்பாலான இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடிக்கும் என்று அனைத்து கருத்துக்கணிப்புகளும் கூறியிருந்த நிலையில் அதை மெய்ப்பிக்கும் வகையில் தற்போதைய முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.
தற்போதைய நிலவரப்படி ஆம் ஆத்மி கட்சி 55 இடங்களிலும், பாரதிய ஜனதா கட்சி 12 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும், மற்றவை ஒரு இடத்திலும் முன்னணியில் உள்ளது. டெல்லியில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 36 தொகுதிகளில் வெற்றி பெற்றாலே தனிப்பெரும்பான்மை கிடைத்துவிடும் நிலையில் ஆம் ஆத்மி 55 இடங்களில் முன்னணியில் இருப்பதால், அந்த கட்சி ஆட்சியை கைப்பற்றுவது உறுதியாகிவிட்டது. அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் முதல்வராகிறார். அவருக்கு சென்னை டுடே நியூஸ் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
கடந்த பாராளுமன்றத்தேர்தலில் மோடி அலையின் மூலம் இந்தியா முழுவதும் மாபெரும் வெற்றி பெற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு இது முதல் தோல்வி என அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவித்துள்ளன.