இலங்கை அதிபர் சிறிசேனாவின் பதவி பறிபோகிறதா?
சமீபத்தில் இலங்கையில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சி தோல்வி அடைந்து ராஜபக்சேவின் கட்சி பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் தோல்விக்கு பொறுப்பேற்று அதிபர் பதவியை சிறிசேனா ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே சிறிசேனா கட்சிக்கு ஆதரவு கொடுத்து வரும் பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி தனித்து ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இக்கட்சிக்கு 106 உறுப்பினர்கள் உள்ளதால் இன்னும் மெஜாரிட்டிக்கு 7 இடங்கள் மட்டுமே தேவைப்படுகிறது. மற்ற சிறு கட்சிகளிடமிருந்து இந்த ஆதரவை பெற்று ஆட்சியை தொடரலாம் என்று பிரதமர் ரனில்விக்ரமசிங்கே விரும்புகிறார். எனவே அதற்கான முயற்சியில் அவர் இறங்கி உள்ளார்.
அதே நேரத்தில் சிறிசேனா கட்சியும் தனித்து ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளது. இக்கட்சிக்க்கு 95 இடங்கள் இருப்பதால் மெஜாரிட்டிக்கு தேவையான இடங்களை சிறிய கட்சிகளிடம் பெற முடிவு செய்துள்ளது. ஒருவேளை சிறிசேனா கட்சி தனித்து ஆட்சி அமைக்குமானால் பிரதமர் ரனிலை பதவியில் இருந்து நீக்கிவிட்டு அதற்கு பதிலாக இலங்கை போக்குவரத்து மந்திரி நிமல்சிறிபாலா டிசில்வாவை பிரதமராக்க சிறிசேனா திட்டமிட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.