சுற்றுச்சூழலை பாதிக்காத விநாயகர் சிலைகள் தயார்!

LRG_20150910105916675643 (1)

சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில், விநாயகர் சதுர்த்திக்கு, சிலைகள் தயாராகி வருகின்றன. பொன்னேரி, விநாயகர்  சதுர்த்தி வழிபாட்டு குழுவின் சார்பில், மேட்டுப்பாளையம் கிராமத்தில், விநாயகர் சிலைகள் உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது.  இங்கு, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத, தண்ணீரில் எளிதில் கரையக்கூடிய வகையில் தேங்காய் நார், கிழங்கு மாவு உள்ளிட்ட  நச்சுத்தன்மை இல்லாத பொருட்களால், சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதில், பஞ்சமுக விநாயகர், வில்லுடன் கூடிய ராமர்  விநாயகர், நரசிம்மர் – ஆஞ்சநேய விநாயகர், வீர விநாயகர் என, பல்வேறு உருவங்களில், சிலைகள் தயாராகி வருகின்றன. இம்மாதம்,  17ம் தேதி அன்று, இச்சிலைகள் பொன்னேரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வைக்கப்பட்டு, 20ம் தேதி, பழவேற்காடு கடலில்  கரைக்கப்பட உள்ளன. இதுகுறித்து,  விநாயகர் சதுர்த்தி விழா குழுவின் தலைவர் ஜானகிராமன் கூறுகையில், ‘‘4 அடி முதல், 7 அடி  உயரத்தில், 100 விநாயகர் சிலைகளை தயாரித்து வருகிறோம். சிலைகளுக்கு உண்டாகும் மொத்த செலவினங்களை கணக்கிட்டு, விலை  நிர்ணயிக்கப்படும்,’’ என்றார்.

Leave a Reply