அஜீத் போன்ற அண்ணன் வேண்டும். இளம்பெண்களின் ஏக்கம்
அஜீத், ஸ்ருதிஹாசன் நடிப்பில் வரும் 10ஆம் தேதி வெளிவரவுள்ள ‘வேதாளம்’ திரைப்படத்திற்கு இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் இந்த படத்தின் முதல் மூன்று நாட்கள் ரிசர்வேஷன் முடிந்துவிட்டது. இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் சிறுத்தை சிவா, அஜீத் குறித்தும் இந்த படத்தின் கதை குறித்தும் மனம் விட்டு ஒருசில விஷயங்களை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
‘வேதாளம்’ திரைப்படம் ஆக்சன், த்ரில்லர், சஸ்பென்ஸ், படம் என்று பலர் நினைத்து கொண்டிருப்பது தவறு என்றும் இந்த படம் முழுக்க முழுக்க ஒரு ஃபேமிலி எண்டர்டெயின்மெண்ட் படம் என்றும் குறிப்பாக ‘பாசமலர்’ போன்று அண்ணன் தங்கை பாசத்தை மிக ஆழமாக கூறும் கதை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் இந்த படத்தை பார்க்கும் ஒவ்வொரு இளம்பெண்ணும் அஜீத் போல நமக்கும் ஒரு அண்ணன் வேண்டும் என ஏங்க வைக்கும் அளவுக்கு இந்த படத்தில் அண்ணன் – தங்கை செண்டிமெண்ட் காட்சிகள் கொட்டிக்கிடப்பதாகவும் அஜீத்தும் லட்சுமிமேனனும் அண்ணன் தங்கையாக நடிக்கவில்லை என்றும் அண்ணன் தங்கையாகவே வாழ்ந்திருக்கின்றார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தபின்னர் தன்னிடம் அஜீத், ‘மற்ற படங்களைவிட ‘வேதாளம்’ படத்திற்கு அதிகபட்ச உழைப்பை தந்துள்ளதாகவும், குறிப்பாக இத்தாலி நாட்டில் கப்பலில் நடைபெற்ற ஆக்சன் காட்சிகளில் நடித்த அனுபவங்களை தன்னால் மறக்க முடியாது என்று கூறியதாகவும், இந்த படத்தில் அஜீத் ‘தரலோக்கல்’ கேரக்டர் மற்றும் நார்மல் கேரக்டர் என இரண்டு வேடங்களில் நடித்திருப்பதாகவும் சிவா கூறியுள்ளார்
வீரம்’ படத்தை இயக்கி முடித்தவுடன் மீண்டும் ஒருமுறை நாம் கண்டிப்பாக இணைவோம் என்று அஜீத் கூறியதாகவும், அவர் கூறியதுபோலவே ‘வேதாளம்’ படத்தில் மீண்டும் தற்போது இணைந்துள்ளதாகவும் கூறிய இயக்குனர் சிவா, அதேபோல் இந்த படம் முடிந்த பின்னரும் மீண்டும் ஒருமுறை நாம் இணைவோம் என்று அவர் கூறியதாகவும், அந்த நாள் என்று வரும் என தான் காத்துக்கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.