அன்னை தெரசா அறக்கட்டளை நிர்வாகி நிர்மலா ஜோஷி மரணம்

nirmalaஅன்னை தெரசாவுக்கு அடுத்த நிலையில் இருந்து அவருடைய அறக்கட்டளையை நிர்வாகம் செய்து வந்த சகோதரி நிர்மலா ஜோஷி இன்று உடல்நலக்கோளாறு காரணமாக மரணம் அடைந்தார். அவருக்கு வயது 81.

கொல்கத்தா நகரில் அன்னை தெரசா நிறுவிய மிஷினரீஸ் ஆஃப் சேரிட்டி என்ற அறக்கட்டளையை அவருடைய காலத்திற்கு பின்னர் கடந்த 1997 ஆம் ஆண்டு முதல் நிர்வகித்து வந்தவர் சகோதரி நிர்மலா ஜோஷி. இவர் கடந்த சில காலமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு இருந்த நிலையில் கொல்கத்தா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் சிகிச்சையின் பலனின்றி கொல்கத்தாவில் நிர்மலா ஜோஷி இன்று காலை காலமானார்.

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி நகரில் பிறந்த சகோதரி நிர்மலா ஜோஷி, தனது 17வது வயதில் மிஷினரீஸ் ஆப் சேரிட்டியில் இணைந்தார். ஏழை எளிய மக்களுக்கு அவர் ஆற்றிய சேவைக்காக கடந்த 2009 ஆம் ஆண்டு, மத்திய அரசு அவருக்கு பத்ம விபூஷன் விருது வழங்கியது.

நிர்மலா ஜோஷியின் மறைவுக்கு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்பட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply