சீதாராம் யெச்சூரி மீது தாக்குதல். பழிக்கு பழிவாங்கிய கம்யூனிஸ்டுகள்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும், மாநிலங்களவை எம்பியுமான சீதாராம் யெச்சூரி நேற்று மத்தியப் பிரதேசத்தில் துபாக்கி சூடு காரணமாக விவசாயிகள் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்து தனது கருத்துக்களை ஆவேசமாக கூறிக்கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அவருடைய கருத்தை கேட்டு ஆத்திரமடைந்த ஹிந்து சேனா என்ற அமைப்பைச் சேர்ந்த 2 மர்ம நபர்கள்ல் சீதாராம் யெச்சூரியை தாக்க முயற்சி செய்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் சீதாராம் யெச்சூரி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் திருவனந்தபுரத்தில் உள்ள பி..ஜே.பி அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த இரு மர்ம நபர்கள்ல் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாகவும் இந்தத் தாக்குதலை கண்டித்து கேரளாவில் இன்று கடையடைப்புப் போராட்டம் நடத்தவுள்ளதாகவும் கேரள பாஜக தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.