இந்தியாவின் முதல் செயற்கைக் கோளான “எஸ்எல்வி-3′ விண்ணில் வெற்றிகரமாக ஏவ பெரிதும் காரணமாக இருந்த சிவதாணு பிள்ளை அவர்களுக்கு லால்பகதூர் சாஸ்திரி விருது வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது அவருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் அக்டோபர் 7-ஆம் தேதி நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவவுக்கு வழங்குவார். இந்த விருதுடன் ரூ.5 லட்சம் ரொக்கமும், பாராட்டுப் பத்திரமும் அவருக்கு வழங்கப்படும்.
இந்திய ராணுவத்தின் சக்தியை உலகுக்கு உணர்த்திய பிரமோஸ் ஏவுகணை தயாரிக்கும் திட்டத் தலைவராக சிவதாணு செய்த பணி காலத்தால் அழிக்க முடியாதது என்றும் இந்திய வான்வெளித் துறைக்கும் பொறியியல் கட்டுமானத் துறைக்கும் சிவதாணு பிள்ளை ஆற்றிய பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் அவருக்கு இந்த விருது வழங்கவுள்ளதாகவும், அனில் சாஸ்திரி கூறியுள்ளார்.,