2017- அக்டோபர் 1ஆம் தேதி சிவாஜி மணிமண்டபம் திறக்கப்படும். நீதிமன்றத்தில் அரசு தகவல்

2017- அக்டோபர் 1ஆம் தேதி சிவாஜி மணிமண்டபம் திறக்கப்படும். நீதிமன்றத்தில் அரசு தகவல்
sivaji
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் விரைவில் கட்டப்படும் என சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன்பின்னர் சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள சிவாஜி கணேசன் சிலையை எடுத்துவிட்டு, விரைவில் கட்டப்போகும் மணிமண்டபத்தில் அந்த சிலை வைக்கப்படும் என்றும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள நடிகர் சிவாஜிகணேசன் சிலை குறித்து நாகராஜன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, சிவாஜிக்கு அடையாறு பகுதியில் மணிமண்டபம் கட்டி, அங்கு அந்த சிலை நிறுவப்படும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் சதீஷ் அக்னி ஹோத்ரி, கே.கே.சசிதரன் ஆகியோர் முன் ஆஜரான அரசு வழக்கறிஞர் ‘‘அடையாறு பகுதியில் சிவாஜி மணிமண்டபம் கட்டும் பணி வரும் அக்டோபர் 1-ம் தேதி தொடங்கி 2017-ல் முடிக்கப்படும்’’ என்று கூறினார்

அரசு கட்டிடங்கள் ஓராண்டிலேயே கட்டி முடிக்கப்படும்போது, 2 ஆண்டு காலம் ஏன் என்று நீதிபதிகள் கேட்டதற்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர், அரசின் கருத்தை கேட்டுத் தெரிவிப்பதாக கூறினார். இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை 4 வாரங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டது.

Leave a Reply