பிரபாஸ், அனுஷ்கா, ராணா டக்குபாய், தமன்னா, நாசர் மற்றும் பலர் நடித்த ‘பாஹுபாலி’ திரைப்படம் வரும் ஜூலை மாதம் 17ஆம் தேதி ரிலீஸ் செய்ய எஸ்.எஸ்.ராஜமவுலி முடிவு செய்துள்ளார். இந்த படத்தின் தமிழ் ரிலீஸ் உரிமையை பெற்றுள்ள ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்திற்கு இந்த தேதி சற்று சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘ரஜினி முருகன்’ படத்தின் ரிலீஸ் தேதி ஜூலை 10 என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தையும் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம்தான் ரிலீஸ் செய்கிறது. சிவகார்த்திகேயன் படத்திற்கு தற்போது நல்ல மாஸ் இருப்பதால் அதற்கு அடுத்த வாரமே மிகப்பெரிய பட்ஜெட் படம் வெளியானால் சிவகார்த்திகேயனின் ‘ரஜினி முருகனுக்கு பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகிறது.
எனவே பாஹுபாலி படம் ஜூலை 17ல் ரிலீஸ் ஆவது உறுதி செய்யப்பட்டால் ரஜினி முருகன் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்க ஸ்டுடியோ க்ரீன் முயற்சி செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.
சிவகார்த்திகேயன் படத்தை ஒருவாரம் அனுஷ்கா படம் ஒரு வாரம் பின்னுக்கு தள்ளப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.