சிவகார்த்திகேயனின் மெகா திட்டம். விஜய்யுடன் மோத முடிவு?

vijay andsivaசமீபத்தில் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகிய இருவருக்கும் இடையே மனஸ்தாபம் இருந்ததாக செய்திகள் வெளிவந்தன. ஆனால் இந்த செய்திகள் அனைத்துமே பொய் என்று தற்போது நிரூபணம் ஆகிவருகிறது. இருவரும் எப்பொழுதும் போல நண்பர்களாக நீடிப்பது தற்போது உறுதியாகியுள்ள நிலையில் பரபரப்பை ஏற்படுத்த அவர்களே செய்த சதிதான் இந்த பிரிவு நாடகம் எனவும் கூறப்படுகிறது.

மேலும் அடுத்ததாக சிவகார்த்திகேயன் விரைவில் ஒரு புதிய பரபரப்பை ஏற்படுத்த திட்டம் போட்டுள்ளதாக கோலிவுட்டில் செய்தி கசிந்து வருகிறது. ஏற்கனவே சிவகார்த்திகேயன் பல ஆட்களை வேலைக்கு அமர்த்தி ஃபேஸ்புக்கில் தன்னுடைய பெயரில் பல போலிக்கணக்குகளை ஆரம்பித்துள்ளதாக புரளி கிளம்பி வரும் நிலையில் தற்போது ஃபேஸ்புக்கில் இளையதிலகம் சிவகார்த்திகேயன் என்ற பெயரில் பல பக்கங்களை சிவகார்த்திகேயனின் ஆட்கள் ஆரம்பித்து அதில் விஜய்க்கு எதிராக ஸ்டேட்டஸ் போட்டு வருவதாக கூறப்படுகிறது.இந்நிலையில் இளையதளபதி பட்டத்தை விஜய்யிடம் இருந்து கைப்பற்ற சிவகார்த்திகேயன் திட்டமிட்டுள்ளதாக திடுக்கிடும் தகவல் பரவி வருகிறது.

விஜய் தற்போது புலி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அவர் ஜூன் மாதம் வெளியிட முடிவு செய்திருக்கும் நிலையில் அதே தேதியில் சிவகார்த்திகேயன் தனது ரஜினிமுருகன்’ படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்திருப்பதாகவும், ஒருவேளை விஜய்யுடன் நேருக்கு நேர் மோதி தனது படம் வெற்றி பெற்றுவிட்டால் இளைய தளபதி பட்டத்தை எளிதாக கைப்பற்றிவிடலாம் என்றும் சிவகார்த்திகேயன் தரப்பு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இதெல்லாம் வெறும் புரளி, பல வருடங்களாக சினிமாவில் இருந்து பல சாதனைகள் செய்த விஜய்யுடன் ஒருசில படங்கள் மட்டுமே நடித்த சிவகார்த்திகேயன் ஒரு போட்டியே இல்லை என்றும் கோலிவுட்டில் விவரம் தெரிந்தவர்கள் கூறி வருகின்றனர்.

Leave a Reply