தனுஷ், சிம்புவுடன் மோதுவதை தவிர்த்த சிவகார்த்திகேயன்

dhanush and simbuசிம்பு நடித்த வாலு’ திரைப்படம் பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டு வந்தது. ஒருவழியாக தற்போது ஜூலை 17ஆம் தேதி உறுதியான ரிலீஸ் தேதியை சிம்பு அறிவித்துள்ளார். ஆனால் அதே நாளில் தனுஷின் ‘மாரி’ திரைப்படமும் ரிலீஸ் ஆகிறது.

இதற்கு முன்னர் தனுஷ் மற்றும் சிம்பு படங்கள் இரண்டு முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. புதுக்கோட்டையில் இருந்து சரவணன் மற்றும் கோவில் ஆகிய படங்கள் 2004ஆம் ஆண்டு ஜனவரியிலும், மன்மதன் மற்றும் ட்ரீம்ஸ் ஆகிய படங்கள் அதே ஆண்டு நவம்பர் மாதத்திலும் மோதியுள்ளது. தற்போது மூன்றாவது முறையாக ஜூலை 17ஆம் தேதி வாலுவும் மாரியும் மோதுகின்றது.

இந்நிலையில் அதே ஜூலை 17ஆம் தேதி சிவகார்த்திகேயனின் ‘ரஜினிமுருகன்’ திரைப்படமும் ரிலீஸ் ஆகவுள்ளதாக முதலில் செய்திகள் வெளிவந்திருந்தது. ஆனால் தனுஷ், சிம்பு படங்களுக்கே தியேட்டர் பிடிப்பதில் பெரும் போட்டி இருக்கும் என்பதாலும், தனுஷுடன் நேரடியாக மோதுவதை தவிர்ப்பதற்காகவும், சிவகார்த்திகேயன் தனது ரஜினிமுருகன் படத்தின் ரிலீஸ் தேதியை ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளி வைத்துவிட்டதாக கூறப்படுகிறது.

Leave a Reply