கமல் ரசிகர்களுக்கு மன்னிப்பு அளித்த சிவகார்த்திகேயன்

கமல் ரசிகர்களுக்கு மன்னிப்பு அளித்த சிவகார்த்திகேயன்

kamal-sivaகோலிவுட் திரையுலகில் இன்றைய நிலையில் அஜித், விஜய்க்கு அடுத்த இடத்தை கிட்டத்தட்ட பிடித்துவிட்டார் சிவகார்த்திகேயன். நடித்த அனைத்து படங்களும் ஹிட், குடும்பத்துடன் பார்க்கும்படியான படம் என்று பெயர் வாங்கிவிட்ட சிவகார்த்திகேயனுக்கு இன்னும் மூன்று வருடங்களுக்கு படங்கள் புக் ஆகியுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மதுரை விமான நிலையத்தில் தன்னை தாக்கிய கமல் ரசிகர்கள் குறித்த கேள்விக்கு பதிலளிக்கும்போது, ‘என்னுடைய தந்தை ஒரு சிறை அதிகாரி என்பதால் நான் சிறையை நேரில் பார்த்துள்ளேன். சிறை வாழ்க்கை எவ்வளவும் கொடுமையானது என்பதும் சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் அவர் படும் வேதனையும் எனக்கு தெரியும். புகார் கொடுத்து அவர்களை தண்டிக்க வேண்டும் என்பது என்னுடைய நோக்கம் இல்லை.அவர்களை நான் மனதளவில் மன்னித்துவிட்டதால் அவர்கள் மீது புகார் கொடுக்கவில்லை’ என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை மோகன்ராஜா இயக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் 11ஆம் தேதி ஆரம்பமாகவுள்ளது.

Leave a Reply