இத்தாலி மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட சிவகுமாரின் ‘மகாபாரதம்’ சொற்பொழிவு

இத்தாலி மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட சிவகுமாரின் ‘மகாபாரதம்’ சொற்பொழிவு

பழம்பெரும் நடிகர் சிவகுமார், நடிகர் மட்டுமின்றி சிற்நத ஆன்மீக சொற்பொழிவாளர் என்பவர் அறிந்ததே. குறிப்பாக அவருடைய இராமாயணம், மகாபாரதம் சொற்பொழிவு புகழ்பெற்றது

இந்த நிலையில் சிவகுமாரின் மகாபாரத சொற்பொழிவு தற்போது இத்தாலி மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இன்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சிவகுமார் கூறியதாவது:

மகாபாரதம் நாவலை ஒரு சில வருடங்கள் ஆராய்ச்சி செய்து சொற்பொழிவு ஆற்றியுள்ளேன். ஒரு லட்சத்திற்கும் அதிகமான மகாபாரத DVD – க்கள் இதுவரை விற்றுள்ளன. “ஹிந்து” வில் பணிபுரிந்த மாருதி வெங்கடாசலம் என்ற பெண்மணி அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்தார். குமார் ஒரு நாள் என்னிடம் தான் இதை இத்தாலி-யில் மொழிபெயர்ப்பு செய்ய போவதாக கூறினார். நான் அவர் காமெடி பண்ணுகிறார் என்று என்னினேன். சரி முயற்சியுங்கள் என்றேன். மாருதி வெங்கடாசலம் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்ய ஒரு வருடத்திற்கும் அதிகமான நேரமானது. இத்தாலி யில் மொழிபெயர்ப்பு செய்ய இரண்டு வருடங்கள் ஆகும் என்று நினைத்தேன். ஆனால் மூன்றே மாதங்களில் முடித்துவிட்டார். மிகுந்த மகிழ்சியாக இருந்தது. அவ்ளோ பெரிய காவியம் மகாபாரதம் அது வேறொரு மொழியில் புத்தகங்களாக மாறி இத்தாலி செல்வதற்கு கண்டிப்பாக நான் உதவி செய்வேன்

Leave a Reply