சிவனின் அஸ்டமூர்த்திகள் யாா்?

images (3)

ஒருமுறை பிரம்மன் தனக்கு ஈடான வகையில் தனக்குஒரு மகன் இருந்தால் எப்படியிருக்கும் என்று நினைத்தார். பிரம்மன்நினைத்தவுடன் அவர் துடையின் மேல் ஒரு குழந்தை தோன்றினான்.அக்குழந்தையின் கழுத்து நீலமாகவும் தலைமுடி சிகப்பாகவும்இருந்தது. அதனால் பிரம்மா அவனுக்கு நீலலோகிதன் எனபெயரிட்டார்.

 அவன் பிறந்தவுடனே அழத்தொடங்கினான்.இதைக்கண்ட பிரம்மா அவனுக்கு ருத்திரன் என்று பெயரிட்டார்.இருந்தாலும் அக்குழந்தை அழுகையை நிறுத்தவில்லை, சரி நீ இனிபவன் என்று அழைக்கப்படுவாய் என்றார். ஆயினும் அக்குழந்தைஅழுகையை நிறுத்தவில்லை. இதனால் பிரம்மன் வரிசையாக சிவன்,பசுபதி, ஈசன், பீமன், உக்கிரன், மகாதேவன் என்று மேலும் சிலபெயர்களைச் சூட்டினார். அதன் பின் அக்குழந்தையின் அழுகைநின்றது.

பரமசிவனுக்குரிய எட்டு பெயர்களின் விபரங்கள்

  1. ருத்திரன்: சூரிய ஸ்தானத்தில் இருந்து இந்த உலகத்திலுள்ளஎல்லா உயிரினங்களைக் காப்பாற்றுவார். அப்பொழுது அவருடையஉருவம் உக்கிரகமாக இருக்கும். அவருடைய மனைவியின் பெயர்சுவர்ச்சலா. மகனின் பெயர் சனீ.
  2. பவன்: ஜலரூபத்தில் இருப்பார். இவரது மனைவியின் பெயர்உஷா. மகனின் பெயர் உசனன்.
  3. சிவன்: இவருக்கு சர்வன் என்று இன்னொரு பெயரும் உண்டு.மனைவி விவேகி. மகன் அங்காரன்.
  4. பசுபதி: இவரின் இடம் அக்னி. மனைவி ஸ்வாஹா தேவி.மகன் ஸ்கந்தன்.
  5.  ஈசன்: இவருடைய இடம் வாயு. மனைவி சிவ. மகன்மனோஜவன்.
  6.  பீமன். இவருடைய இடம் ஆகாயம். பத்து திசைகளும்இவருடைய மனைவிகள். மகன் ஸ்வர்க்கன்.
  7. உக்கிரன்: யாக தீட்ச்சையில் இருக்கும் யஜமானன்இவருடைய இடம். மனைவி தீட்சை. மகன் சந்தானன்.
  8. மகாதேவன்: இவருடைய இடம் சந்திரன். மனைவி ரோகினி.மகன் புதன்.

பஞ்ச பூதங்கள், சூரிய சந்திரர்கள் இவை அனைத்தும்பரமசிவன்தான் என்பதை இந்த அஸ்டமூர்த்திகள்உணர்த்துகின்றன.

Leave a Reply