சிவனின் உள்ளங்காலை காண வேண்டுமா?

download

பாற்கடலை கடைந்த போது மோகினி  ரூபத்தில் விஷ்ணுவும்  சிவனும் இணைந்த காரணத்தால் உருவானவரே “ஐயப்பன்” என்பது தெரிந்ததே என்றாலும் மோகினியின் அழகில் மயங்கிய  சிவபெருமானும்  பிக்ஷாடனர் என்று உரு கொண்டு அழகின் உச்சமாக  விளங்கினார். ஐயப்பனின் தோன்றலுக்கு பின் சிவபெருமான்  பிக்ஷாடனராகவே காடு வழிகளில் நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது தாருகா வனத்திற்கு அவர் வந்த போது முனிவர்கள் தங்களுடைய தவங்களை செய்து கொண்டிருந்தனர்.  பிக்ஷாடனருடைய ஆஜானுபாகுவான தோற்றத்தில்  முனிகளின் மனைவிகள்  மயங்கினர். 

இதைக்கண்ட முனிகள் வந்திருப்பது சிவனே என்று அறியாமல் தங்களுடைய நெறியில் இருந்து தவறி  தவறான வழியில்   தங்கள் தபோ வலிமையை பயன்படுத்த தொடங்கினர்.

கொடூரமான மிருகங்களை அந்த மனிதன் மேல் ஏவினர்.அதில்  ஒரு யானையின் வெறி கொண்ட சீற்றத்தால் வெகுண்ட சிவன் ஒரு துரும்பாக மாறி அந்த யானையின் உடலில் புகுந்தார். சிவன் யானையின் உடலில் புகுந்த அந்த நொடி இந்த உலகமே இருண்டது. அச்சமயம்  பால முருகனிடம்  விளையாடிக்கொண்டிருந்த பார்வதியார் அச்சமுற்று அங்கிருந்து விலகி செல்ல எத்தனித்த போது சிவபெருமான் ஆறு கரங்களுடனும் ஆயுதங்களுடனும் யானையின் தலையில் நின்றுகொண்டு அதன் தோலை கிழித்த வண்ணம்  காணப்பட்டார்.

அன்றிளிறுந்தே ” கஜசம்ஹார மூர்த்தியாக” இங்கே கோவில் கொண்டார்.சிவா பெருமானின் வீரத் திருவிளையாடல்களை குறிக்கும் “அஷ்ட வீரட்டான ஸ்தலங்களில் ” ஒன்றாக இக்கோவில் அறியப்படுகிறது.

45fc1fd2e4639db7a71d040581c2cb26_L

இந்த சம்பவம் “தான்” என்கிற அகங்காரத்தை  அழிக்கவும், ஒழுக்கத் துடன்  நெறி தவறாது  நடக்கவும்  விளக்கவே நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த கோவிலில்  பித்தளையால் செய்யப்பட்ட  சிலை இந்த கஜசம்ஹாரத்தை  அப்படியே   பிரதிபலிக்கிறது.கூடவே பால முருகனை தூக்கிகொண்டு ஓட முற்படும் பார்வதி தேவியாருமாக தத்ரூபமாக அமையபெற்றிருக்கிறது.

வேறு எந்த கோவிலிலும் காண முடியாத வகையில்சிவபெருமானின் உள்ளங்காலை இங்கே காணலாம்.

இங்கே கஜசம்ஹார மூர்த்தி தான் முக்கியமாக கருதப்பட்டாலும் மூலவரின் திருநாமம் “கீர்த்திவாசர் ” எனப்படுவதாகும். அம்மையாரின் பெயர் “பாலகுராம்பிகை” என்பதாகும்.

 மயிலாடுதுறைலிருந்து   9 கி.மீ தொலைவில்   திருவாரூர்  செல்லும் வழியில் அமைந்துள்ளது இந்த  வழுவூர்.

அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோவில்

வழுவூர்

வழுவூர் அஞ்சல்

வழி மயிலாடுதுறை

நாகப்பட்டிணம் மாவட்டம்

PIN – 609401

ஆலயம் காலை 6-30 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

 

 

 

 

Leave a Reply