சிவபாத்திரம் கரபாத்திரம் ஆனார்.

11951243_774754289297274_8577235613493635645_n

சிவபாத்திரம் கரபாத்திரம் ஆனார்.

இவ்வாறு கரபாத்திர சுவாமிகள் வாரத்தில் பாதி நாட்கள். கடற்கரையில் விடிய, விடிய ஆழ் நிலை தியானத்தில் இருக்கலானார். வியாபாரத்தில் இவருக்கு நாட்டம் குறைந்தது என்று சொல்வதை விட. அதில் அறவே விருப்பம் இல்லாமல் ஆனது.

வீட்டில் உள்ளவர்கள் இவரின் இந்த திடீர் மாற்றம் கண்டு கவலை கொண்டனர். அந்த கவலைக்கான காரணம். இவர் வியாபாரம் ஒழுங்காக செய்யாமல் இருப்பதனால் அல்ல. ஒன்றிற்கு மூன்று அண்ணன்கள் அதை செய்ய இருக்கிறார்கள். எங்கே இவர் சாமியாரா பெய்டுவாரோனு வீட்டில் உள்ளவர்கள் பயந்தனர். பலவாறு அவர் மனத்தை திசை திருப்ப பார்த்தனர். ஆனால் அவர் தான் கொண்ட முடிவில் உறுதியாக இருந்தார்.

தனது குரு ரத்தின தேசிகரிடம் அவர் தான் துறவறம் பெற விரும்புவதாகவும். தனக்கு துறவர தீட்சை வேண்டுமென்றும் அவர் கேட்க. அதற்கு அவர் குரு. புறத்துறவை காட்டிலும் அகத்துறவே சிறந்தது. ஒரு உண்மையான அகத்துறவியாக உள்ள உனக்கு எதற்கு தனியாக துறவர தீட்ஷை என்று சொல்லி கொடுக்க மறுத்து விட்டார். அதற்கான காலம் பின்னால் வரும் என்று சொன்னார்.

அதன் பின்னர் தொடர்ந்து அவர் பழையபடி மும்முரமாக வியாபாரத்தில் ஈடுபட ஆனார். அதை விட அதிகமாக ஆழ்நிலை தியானம் புரிவதிலும் ஈடுபட்டார்.

விட்டக்குறை தொட்டகுறை என்பது முதுமொழி. ஒருவர் இப்பிறவியில் கற்ற கல்வி ஏழேழு பிறவிகளுக்கும் தொடர்ந்து வரும் என்கிற வள்ளுவ பெருமான் வாக்கிற்கிணங்க. இவர் இதற்கு முன் பல பிறவிகளில் செய்த சாதகத்தின் பயனாய். பல வருடங்கள் காட்டில் பட்டினி கிடந்து தவம் செய்து பல ஞானிகள் அடைந்த நிர்விகல்ப்ப சமாதி நிலையை இவர் வியாபாரம் செய்து. நேரம் கிடைக்கும் பொழுது பூஜை செய்து மூன்று வேளை நன்றாக உண்டு இந்த நிலையை தானாக எந்த ஒரு குருவின் துணையும் இல்லாமல் அடைந்தார்.அதுவும் வெறும் 19 வயதில். ரத்தின தேசிகர் இவருக்கு மெய்கண்ட சாஸ்திரம், ரிபு கீதை போன்ற நூல்களை கற்று கொடுத்த குரு. அவர் இவருக்கு குண்டலினி யோகம் சொல்லி கொடுத்தவர் அல்ல.

வருடங்கள் உருண்டோடின. சுவாமிகளின் குருவான ரத்தின தேசிகர் காலமானார். ஒருபுறம் வீட்டில். அவரது அண்ணன்கள் இருவரும் அவரை திட்டி கொண்டே இருந்தனர். [பாச திட்டல் தான்] தந்தை மறைவிற்கு பிறகு அனைவரும் திருப்போரூரில் இருந்து வட சென்னை பகுதிக்கு குடி வர மூத்த அண்ணன் மட்டும் திருப்போரூரிலேயே இருந்து விட்டார்.

அரங்கநாதம், வடிவேல் என்று கரபாத்திர சுவாமிகளுக்கு இரண்டு நண்பர்கள். சுவாமிகள் போலவே அவர்களும் ஆன்மீகத்தில் நாட்டம் உடையவர்கள். அந்த இரு நண்பர்கள் தான் உன்னை கெடுத்து குட்டி சுவர் ஆக்கியது என்று கடிந்தது மட்டும் அல்லாமல். அவர்கள் முகத்திற்கு நேராகவே சுவாமிகளின் அண்ணன்கள் அவ்வாறு திட்ட. சுவாமிகள் இது தான் தான் துறவறம் மேற்கொள்வதற்கு சரியான தருணம் என்று முடிவு செய்து தனது தாயாரிடம் அனுமதி கேட்டார். எந்த தாய் இதற்கு அனுமதிப்பாள். முதல் நாள் அனுமதிக்கவில்லையென்றாலும் இரண்டாம் நாள் எப்படியோ அனுமதி வாங்கி விட்டார். தாய் ஒருவருக்கு இருக்கும் பொழுது அவர் அனுமதியின்றி சன்யாசம் வாங்கினால் அது செல்லாது. தாய்மைக்கு அவ்வளவு முக்கியத்துவம்.

தாயாரிடம் அனுமதி பெற்ற பின் அவர் நேரே சென்ற இடம் பட்டினத்தார் சாமிகள் ஆலயம். அங்கு தனது அனைத்து ஆடைகளையும் களைந்து கோமனத்தை உடுத்தி கொண்டார். சன்யாசி ஆனபின் அவர் திருப்போரூரில் உள்ள தனது பெரிய அண்ணியிடம் தான் முதல் பிட்சை எடுத்தார். வீட்டிற்குள் அழைத்தும் வர மறுத்தார். தன்னுடைய கரத்தையே பாத்திரமாக ஏந்தி அவர் பிட்சை எடுத்ததால் கரபாத்திர சுவாமிகள் என்று அழைக்கப்பட்டார். அதன் பிறகு வாழ் நாள் முழுவதும் அவ்வாறே உண்டார்.

பாம்பன் சுவாமிகள் இந்த தவ சீலரின் தவத்திற்கு உதவி புரிந்தது. கரபாத்திரம் சிவப்பிரகாச சுவாமிகள் கேசவ பெருமாள் கோவிலில் தவம் செய்தது முதலியவற்றை நாளை பார்ப்போம்.

Leave a Reply