அமெரிக்க அபார்ட்மெண்டில் 6 குழந்தைகளை கடித்து குதறிய எலிகள்
அமெரிக்காவின் மியாமி நகரில் உள்ள ஒரு அபார்ட்மெண்டில் 24 வீடுகள் உள்ளன. அதில் 22 வீடுகளில் பல்வேறு தரப்பினர் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த அபார்ட்மெண்டில் வாழ்ந்து வரும் 6 குழந்தைகளை எலி கடித்து குதறியதால் நேற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தைகள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் அந்த அபார்ட்மெண்ட் முழுவதையும் சோதனை செய்தபோது பல்வேறு இடங்களில் எலிகள் சர்வசாதாரணமாக உலவி வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அனைவரையும் காலி செய்து எலிகளை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் தரம் குறைந்த பாதுகாப்பற்ற முறையில் அபார்ட்மெண்டை கட்டியதாக அதன் பில்டர் மீது போலீசார் வழக்கு தொடர்ந்துள்ளனர்.