ஆறு மாதங்களுக்கு ஊரடங்கு உத்தரவா? அதிர்ச்சி தகவல்
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகளில் முக்கியமான நாடுகளில் ஒன்றாக பிரிட்டன் நாடும் உள்ளது. அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் நாட்டின் பிரதமரே கொரோனா வைரஸால் தாக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் பிரிட்டன் 14,543 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 750 பேர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன இந்த நிலையில் பிரிட்டன் சுகாதார அமைச்சருக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் ஒரு சில அறிவுரைகளை கூறி உள்ளனர் அதில் முக்கியமானது பிரிட்டனில் அடுத்த ஆறு மாதங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும் என்பதுதான்
இதனை அந்நாட்டு அரசு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது ஆறு மாதங்கள் ஒரு நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை நினைத்துப் பார்க்கவே அச்சமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது