சாலையில் நடக்கும்போது ஐபோனை பயன்படுத்திய இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி.

[carousel ids=”66663,66664″]

தற்போது சாலைகளில் நடந்து செல்லும்போது கூட மொபைல் போனை பயன்படுத்தி செல்லும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. குறிப்பாக இளம்பெண்கள்தான் அதிகளவில் சாலைகளில் நடந்து செல்லும்போது இதுபோன்ற செயல்களில் அதிகம் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தனது ஐபோனை பயன்படுத்தி கொண்டே சாலையில் நடந்து சென்ற சீனப்பெண் ஒருவர் பாதாள சாக்கடையின் மூடிமேல் காலை வைத்ததால், அவருடைய கால் மூடியின் இடைவெளியில் சிக்கிக்கொண்டது.

பாதாளச் சாக்கடையின் மூடியில் 10செ.மீ இடைவெளி இருந்ததால் அந்த பெண்ணின் தொடை வரை அதில் சிக்கி கொண்டதாகவும், அவர் எவ்வளவோ முயற்சித்தும் காலை வெளியே எடுக்க முடியாததால் வேறு வழியின்றி தீயணைப்பு படையினர் வந்து பாதாள சாக்கடையின் மூடியை உடைத்து அவரை மீட்டனர்.

தனது பெயரை தெரிவிக்காத விரும்பாத அந்த பெண் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது, இனிமேல் நான் நடந்து செல்லும்போது எனது ஐபோனை தொடவே மாட்டேன்’ என்று கூறியுள்ளார்.

Leave a Reply