சுட்டு கொல்லப்பட்ட இந்தியரின் மனைவி மீண்டும் அமெரிக்க திரும்ப முடியுமா?
ஐதராபாத்தை சேர்ந்த சீனிவாசன் கடந்த வாரம் அமெரிக்காவில் இனவெறியர் ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் அவருடைய இறுதிச்சடங்கு நேற்று நடைபெற்றது.
இந்த இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள சீனிவாசனின் மனைவி சுனையனா தற்போது மீண்டும் அமெரிக்காவிற்கு திரும்ப முடியாது என்று கூறப்படுகிறது.
புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்ப்பின் புதிய குடியேற்ற விதிகளின்படி எச்4 விசா வைத்துள்ள சுனையனா அமெரிக்காவிற்கு செல்ல முடியாது என்று கூறப்படுகிறது.
ஆனாலும் அவருடைய கணவர் அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்டு இருப்பதை காரணம் காட்டி கோர்ட் மூலம் உரிய உத்தரவுகள் பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.