அதிக நேரம் தூங்குவது உடல் நலத்துக்கு மிகவும் நல்லது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் ரோசெஸ்டர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானி மைகென் நெதர்கார்டு தலைமையிலான குழுவினர் மனிதர்கள் தூங்குவது ஏன்? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
அதில், நன்றாக தூங்கும் போது தான் மூளை சுத்தம் செய்யப்படுவது கண்டறியப்பட்டது. தூங்கும் போது பெருமூளையின் தண்டு வட திரவம் மூளையை சுற்றி பீச்சி அடிக்கப்படுகிறது. அப்போது மூளைக்கு வெளிப்புறம் படிந்திருக்கும் மூலக்கூறுகளின் சிதைந்த பொருட்களும், நச்சு புரோன்டீன்களும் அப்புறப்படுத்தப்படுகின்றன. இதனால் உடல் நலத்திற்கு கெடுதல் ஏற்படாமல் பாதுகாக்கப்படுகிறது.