செய்தியாளர் கொலை எதிரொலி: ஸ்லோவேக்கியா பிரதமர் திடீர் ராஜினாமா
ஸ்லோவேக்கியா நாட்டில் செய்தியாளர் கொலை எதிரொலியால் மக்களிடையே திடீர் புரட்சி ஏற்பட்டதால் வேறு வழியின்றி அந்நாட்டின் பிரதமர் ராபர்ட் பிகோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஸ்லோவேக்கியா நாட்டில் பிரதமரின் ஊழல் குறித்து செய்தியாளர் ஒருவர் சமீபத்தில் ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டார். இந்த நிலையில் அந்த செய்தியாளர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்நாட்டு மக்கள், பிரதமர் ராப்ர்ட் பிகோவிற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு பகலாக நாட்கனக்கில் இந்த போராட்டம் நீடித்து மக்களிடையே புரட்சி வெடித்ததால், பிரதமர் ராபர்ட் பிகோ, தனது பதவியை ராஜினாமா செய்யும் நிலைக்கு ஆளானார்.
இதையடுத்து அதிபர் ஆண்ட்ரேஜ் கிஸ்காவின் அறிவுறுத்தலின்படி தனது பதவியை பிரதமர் ராபர்ட் பிகோ ராஜினாமா செய்தார். புதிய அரசை அமைக்குமாறு துணைப் பிரதமருக்கு அதிபர் ஆண்ட்ரேஜ் அழைப்பு விடுத்துள்ளார். இன்னும் ஓரிரு நாட்களில் புதிய அரசு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது