பாஜக குடியரசு தலைவர் வேட்பாளர் எஸ்.எம்.கிருஷ்ணா?
கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய அமைச்சருமான எஸ்.எம் கிருஷ்ணா திடீரென காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார் என்பது தெரிந்ததே. இந்நிலையில் எஸ்.எம் கிருஷ்ணா விரைவில் பாரதிய ஜனதா கட்சியில் சேரவுள்ளதாக கர்நாடக மாநில பா.ஜ.க தலைவர் எடியூரப்பா கூறியுள்ளார்.
சற்றூமுன் அவர் அளித்துள்ள பேட்டியில், எஸ்.எம். கிருஷ்ணா பா.ஜ.க-வில் சேர முடிவு எடுத்துள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் இன்னும் ஒருசில மாதங்களில் முடிவடையவுள்ள நிலையில் எஸ்.எம்.கிருஷ்ணா, பாஜக வேட்பாளராக குடியரசு தலைவர் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்றும் கூறப்படுகிறது.