பாஜகவில் இணைந்தார் எஸ்.எம்.கிருஷ்ணா. அடுத்த தமிழக கவர்னரா?

பாஜகவில் இணைந்தார் எஸ்.எம்.கிருஷ்ணா. அடுத்த தமிழக கவர்னரா?

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் கர்நாட முதல்வருமான எஸ்.எம்.கிருஷ்ணா நேற்று முறைப்படி பாஜகவில் இணைந்தார். நேற்று பாஜக தேசிய தலைவர் அமீத்ஷா முன்னிலையில் கட்சியில் இணைந்த எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்

84 வயதாகும் எஸ்.எம்.கிருஷ்ணா, கர்நாடக முதல்வர், மத்திய அமைச்சர் உள்பட பல முக்கிய பொறுப்புகளை வகித்த அனுபவம் கொண்டவர். ஆனால் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவர்களுக்கு மரியாதை இல்லை என்பதால், அதில் இருந்து வெளியேற எஸ்எம் கிருஷ்ணா முடிவு செய்தார்

இதனையடுத்து அவர் பாஜக.,வில் இணைவார் என்றும், தமிழகத்தில் காலியாக உள்ள ஆளுநர் பதவிக்கு அவர் நியமிக்கப்படுவார் என்றும் செய்திகள் வெளிவந்த நிலையில் இவற்றில் ஒன்று நேற்று நிஜமாகிவிட்டது.  தமிழகத்தில் தற்போது நிலவும் அரசியல் சூழலை கையாளும் திறமை எஸ்எம்.கிருஷ்ணா உண்டு என்றும் அவர் போன்ற அனுபவம் மிக்க தலைவர் தமிழக கவர்னருக்கு பொருத்தமானவர் என்றும் பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா போன்றோர் கருதுவதாக கூறப்படுகிறது.

Leave a Reply