ஸ்மார்ட் போன்: திருடப்படும் டேட்டாக்கள்!

smart phone

தாய்வானில் ஸ்மார்ட் போன் நிறுவனங்களின் போன்களை பயன்படுத்துவோரின் டேட்டாக்களையும், தகவல்களும் திருடப்படுவதாக வெளியாகி உள்ள தகவல் உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

தாய்வான் சீன கடலில் இருக்கும் ஒரு சிறிய தீவு நாடு. இந்தியாவை காட்டிலும் மிகமிக சிறிய நாடு. இரண்டு மாதங்களுக்கு முன் தாய்வானில் இணைய பாதுகாப்பு குறித்து சோதனை செய்தபோது தாய்வானில் உள்ள டாப் 12 ஸ்மார்ட் போன் நிறுவனங்களின் போன்களை பயன்படுத்துவோரின் டேட்டாக்களையும், தகவல்களையும் அதன் சர்வர்கள் இருக்கும் இடத்திற்கு கடத்துவதாக அந்த நாட்டின் தேசிய தொலைதொடர்பு ஆணையம் தெரிவித்திருக்கிறது.

இதை அறிந்த தாய்வான் அரசு, ஸ்மார்ட்போன்கள் தகவல்களை அதன் முக்கிய சர்வர்களுக்கு கடத்தாத வகையில் சரி செய்து கொடுக்க வேண்டும், இல்லையென்றால் அந்த 12 நிறுவனங்களுக்கும் மொத்தமாக 6.43 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அபராதமாக விதிக்கப்படும் என்றும், அந்த நிறுவனங்களுக்கு தாய்வானில் தங்கள் போன்களை விற்பதற்க்கு தடை விதிக்கப்படும் என்றும் துணிச்சலாக அறிவித்திருக்கிறது.

அந்த டாப் 12 நிறுவனங்களில் உலகின் புகழ்பெற்ற நிறுவங்களான சாம்சங், ஆப்பிள், ஹெச்டிசி, ஜியாமி ஆகியவைகளூம் அடக்கம். இந்த பட்டியலில்  ஹெச்டிசி, அசூஸ் ஆகிய நிறுவனங்களும் உண்டு என்பது கவனிக்க வேண்டிய விஷயம்

நம் இந்தியாவின் விமானப்படை, ஜியாமி போன்கள் தகவல்களை சீனாவிற்கு கடத்துகிறது என்று ஆணித்தரமாக குறிப்பிட்ட பின்பும் கூட மத்திய அரசோ, மாநில அரசோ அதன் மீது எந்த தடையோ, அபராதமோ, நடவடிக்கையோ எடுக்கவிலை என்பது வேதனையிலும் வேதனை.

அது மட்டுமின்றி இரண்டு மூன்று நாட்களுக்கு முன் ஜியாமியின் ரெட்மி நோட் இந்திய இணைய சந்தையான ஃபிளிப்கார்ட்டில், ஆறே நொடிகளில் 50,000 போன்கள் விற்றுத் தீர்ந்தது என்பதை எப்படி எடுத்துக் கொள்வது?

தேசத்தின் பாதுகாப்பைவிட 2000-3000 விலை குறைவு மிக பெரிதாக தோன்றுகிறதா.?

Leave a Reply